வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தைப் புதுப்பிக்காததால் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், ராமகிருஷ்ணா மடம் ஆகிய ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் 6 ஆயிரம் தொண்டு சமய நிறுவனங்களின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் சமய வளர்ச்சி, கல்வி, மருத்துவ சேவைகளுக்காக பணிபுரியும் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நிதியுதவியை வாரி வழங்குவது வழக்கம்.
ஆனால் அதற்கான உரிமத்தைப் புதுப்பிக்காத பல அமைப்புகள் இந்த ஆண்டு உரிமத்தை இழந்துள்ளன. சட்டப்படி இவை வெளிநாடுகளில் இருந்து இனி நிதியைப்பெற இயலாது.