மும்பையில் ஒரு சொகுசுக் கப்பலில் இருந்த 66 பேர் கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவாவில் இருந்து மும்பைக்குத் திரும்பிய மற்றொரு சொகுசு கப்பலில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1827 பயணிகள் உள்ள இந்தக் கப்பலில் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அறிகுறி இல்லாத பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் , இதர அறிகுறிகளுடன் காணப்படும் பயணிகள் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.