ஆஸ்திரேலியாவில் கோல்ஃப் மைதானத்தில் புகுந்த ராட்சத நண்டினால் வீரர்கள் பயம் கொண்டனர்.
மேற்கே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் சில வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, கோல்ஃப் குச்சிகள் வைக்கப்பட்டிருந்த பையின் மேற்பகுதியில் பிரமாண்டமான ராட்சத நண்டு ஒன்று அமர்ந்திருந்ததைக் கண்டனர்.
இதனைப் பார்த்த கோல்ஃப் வீரர் ஒருவர் அதனை லாவகமாகப் பிடித்து கீழே இறக்கினார். அப்போது அதன் கொடுக்குப் பகுதியில் சிக்கியிருந்த மிகவும் வலுவான கோல்ஃப் குச்சியை எடுக்க முயன்றபோது, நண்டு தனது கொடுக்கினால் அந்தக் குச்சியை இரண்டு துண்டாக வெட்டியது.