அமெரிக்காவில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எந்த விதக் காரணமும் கூறி தடுப்பூசி போடுவதைத் தட்டிக் கழிக்காதீர்கள் என்று கூறிய பைடன், கொரோனாவில் இருந்து வெள்ளை மாளிகை கூட தப்பிவிட முடியாது என்று கூறினார்.
கோவிட் தடுப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்திய அவர் தடுப்பூசி செலுத்துவதில் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் மாத்திரைகளும் மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.