உலகின் பலநாடுகளிலும் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வேகமாகப் பரவிக் கொண்டு வந்தாலும் நோய்த் தொற்றின் பேரிடர் காலம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கையளவில் அது அதிகரித்து பரவிவந்த போதும் அதன் தீவிரம் குறைவாக இருப்பதால் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு செல்லாமலேயே குணமாகி விட்டனர். இது முற்றிலும் வேறான அனுபவம் என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள உயிரி அறிவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைரஸ் எப்போதும் நீங்காது. அது உருமாறியபடியே மீண்டும் மீண்டும் வரும் .ஆனால் அதன் உருமாற்றம் அதிகரிக்க அதிகரிக்க நோய்த் தொற்றின் பேரிடர் காலம் முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை ஒமைக்ரான் தாக்கினாலும் அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி வீரியத்துடன் இருப்பதால் ஒமைக்கரான் பாதிப்பை முறியடித்து விடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்