உலகளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்தாலும், கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவது தொடர்பாக நம்பிக்கையளிக்கும் வகையில் தகவல்கள் வெளிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாம் முற்றிலும் மாறுபட்ட கட்டத்தில் இருப்பதாக தெரிவித்த கலிஃபோர்னியா பல்கலைக்கழக நோயெதிர்ப்பாற்றல் துறை நிபுணர் மோனிகா காந்தி, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு ஒமைக்ரான் தொற்று நோயெதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், டெல்டா அலை வீசிய காலத்துடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரான் பாதித்து தீவிர நோய்ப்பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 73 சதவீதம் குறைவாக உள்ளதாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.