கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க போவதாக நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 17 ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது நிபுணர் குழுவிடம் இருந்து விலக்கு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறித்து தொடர்ந்து மெளனம் காத்து வருவதால் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது.
நிபுணர் குழுவிடம் இருந்து சிறப்பு விலக்கு பெற்ற ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.