தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீயை 36 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமை, நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த கட்டிடங்களுக்கு வேகமாகப் பரவியது.
இதில் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேலவை கட்டிடத்தின் கூரையும், தற்போது கட்டி முடிக்கப்பட்ட கீழவை கட்டிடத்தின் கூரையும் இடிந்து விழுந்தன. நாடாளுமன்றத்துக்குள் புகுந்து திருட முயன்றதுடன், கட்டிடத்திற்கு தீ வைத்த குற்றத்திற்காக 49 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.