உலகின் நுரையீறல் என போற்றப்படும் அமேசான் காடுகள் பெருமளவு அழிக்கப்படுவது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த 2015-ல் இருந்து இதுவரை இல்லாத வகையில், பிரேசிலில் அடர்ந்த மரங்கள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை சுட்டிக்காட்டும் பிரேசில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் அனே அலென்கர் கூறுகையில், காடுகள் அழிப்பதையே தற்போதைய வலதுசாரி அதிபர் கொள்கையாக கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2019-ல் அதிபராக பதவியேற்ற ஜார் போல்சோனாரோ நாட்டில் வேளாண்மையை ஊக்குவிக்கப் போவதாகவும், மக்களின் வறுமையை அகற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால், அவர் மறைமுகமாக காடுகள் அழிப்புக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது.