சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வோர், நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது.
அதன்படி, சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.