நாட்டில் காலாவதியான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட்காலத்தை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவேக்சின் தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட்காலத்தை 9 முதல் 12 மாதங்கள் வரையும், கோவிஷீல்டு தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட்காலத்தை 6 முதல் 9 மாதமாகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், காலாவதியான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.