அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடிகர் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதுடன், மேலாளர் ஜான்சன் மூலம் தாக்கியதாகவும், ஆனால் தன்னைப் பற்றி ஊடகங்களில் அவதூறு பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கில் விஜய் சேதுபதி நாளை செவ்வாய்கிழமை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சம்மனை ரத்து செய்யக் கோரி விஜய்சேதுபதி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, வரும் புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.