மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலின் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அதில் பயணித்த 66 பயணிகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட 'கொர்டெலியா குரூஸ்' என்ற சொகுசுக் கப்பலிலிருந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக கோவாவின் வாஸ்கோ துறைமுகத்தில் கப்பலை நிறுத்த முதலில் அனுமதி மறுப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
ஆனால், சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்த பிறகே கப்பலிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவா அரசு தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து நடந்த சோதனையில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.