டெல்லியில் கடந்த 2 நாட்களில் கொரோனா பாதித்தோரில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் 350க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டெல்லியில் இன்று சுமார் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தொற்று உறுதியாகும் விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாக உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையிலான ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1700ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.