அகில இந்திய வானொலி நிலையம் 6 அண்டை நாட்டு மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை இன்று முதல் இரட்டிப்பாக்கியுள்ளது.
நேபாளி சீனமொழி, திபெத்திய மொழி உள்பட ஆறு மொழிகளில் தலா ஒன்றரை மணி நேரமாக உள்ள ஒலிபரப்பு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்ச், சிந்தி, வங்காளி உள்பட 17 அண்டை நாட்டு மொழிகளில் ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. உலகளாவிய ஒருங்கிணைப்பை மொழிவாரியாக ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.