வடகிழக்கு மாநிலமான மிசோராமின் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடி பொருட்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
மியான்மர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சியாகா மாவட்டத்தின் வனப்பகுதியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 81 கிலோ திரவ வெடிபொருட்கள், 94 கிலோ கிரானுலர் வெடிபொருட்கள் மற்றும் 395 கிலோ ஜெலட்டின் கம்பிகளை கைப்பற்றினர்.