டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் போதிலும், பெரும்பாலானவர்கள் அறிகுறிகளற்றும், இலேசான அறிகுறிகளுடனுமே காணப்படுவதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இதனை தெரிவித்த அவர், கொரோனா 2-வது அலை பரவலின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 360 பேரில் 5 பேர் மட்டுமே வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்த கெஜ்ரிவால், ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் நோயின் தீவிரம் குறைவாகவே இருப்பதாக கூறினார்.