கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், கூண்டிற்குள் நுழைந்த நபரை கடித்து குதறிய புலி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர், மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மலேசியப் புலி ஒன்றுக்கு உணவளிக்க முயற்சித்துள்ளார்.
அந்த இளைஞரின் கையை இறுக்கமாகக் கவ்விய புலி, அவரை கூண்டிற்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸ் அதிகாரி, புலியைத் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இளைஞரை மீட்டார்.
அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.