இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் உள்ள ரிட்ஜ் கிரவுண்ட்டில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பேருந்துகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக சிம்லா போலீசார் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வேகமாக வெளியேற உதவி செய்தனர். ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்