கடந்த 2021 ஆண்டில் 145 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான மிகச்சிறந்த தடுப்பு அரணாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 90 சதவீத மக்கள் முதல் டோசும், 60 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் புத்தாண்டு தொடங்கி 3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.