இலவசமாக ஒமைக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள சூழலை பயன்படுத்தி இணையதள குற்றங்கள் நடைபெறுவதாகவும், அதனை எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் போல் போலியாக இணையதளம் உருவாக்கி இமெயில் வாயிலாக பொதுமக்களை தொடர்புகொள்ளும் நபர்கள் ஒமைக்ரானை கண்டறிய இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என விளம்பரம் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி இமெயிலில் இருக்கும் இணையதள முகவரிக்குள் நுழைபவர்களின் வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.