அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடுவானில் கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, 3 மணி நேரம் கழிவறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாந்திற்கு செல்வதற்காக சிகாகோவில் இருந்து ஐஸ்லாந்து சென்ற விமானத்தில், மரிசா ஃபோட்டியோ என்ற பெண், குடும்பத்தினருடன் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், மரிசாவிற்கு தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால், தான் வைத்திருந்த ரேபிட் கிட் மூலம் பரிசோத்துள்ளார்.
அதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து விமான பணிப்பெண்ணிடம் தகவல் தெரிவித்து, தனி இருக்கை கேட்டுள்ளார். இருக்கைகள் நிரம்பியிருந்ததால் பயணிகளின் நலம் கருதி அவர் கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
பயணம் மேற்கொள்ளும் முன் 2 பிசிஆர் பரிசோதனைகளையும், 5 ரேபிட் பரிசோதனைகளையும் மரிசா மேற்கொண்டபோது அவருக்கு கோவிட் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.