உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பேட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிடம்பி ஸ்ரீகாந்துக்கு 7 இலட்ச ரூபாய் பரிசும், திருப்பதியில் ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேடமிண்டன் இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரரிடம் தோற்ற கிடம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெகன்மோகன், 7 இலட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
திருப்பதியில் பேட்மிண்டன் பயிற்சி அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.