உயிர்த்துடிப்புள்ள குஜராத் என்ற பெயரில் சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேயின் IRCTC அமைப்பு தொடங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து குஜராத்துக்கும் கோவாவுக்கும் இரண்டு சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன.
குஜராத் சுற்றுலா ரயில் சோம்நாத் , துவாரகா, அகமதாபாத், சபர்மதி ஆசிரமம், அக்சர்தாம் ஆலயம் உள்ளிட்ட பல ஆன்மீகத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும்.
இதே போன்று கோவா சிறப்பு ரயில், கோவாவின் பல்வேறு தேவாலயங்கள், கடற்கரைகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
இதனிடையே குஜராத்தில் உள்ள கோசாம்பா ரயில் நிலையத்தில் சுவரில் பல்வேறு ராமாயணக் காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளதால் ரயில் நிலையமே ஆலயம் போல காட்சியளித்தது