விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ள கடிதத்தில், இந்தியாவில் சமூக-மத வாழ்வின் அங்கமாக இசையின் பயணம் தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய இசைக்கு வளமான பாரம்பரியமும் கலாசாரமும் உள்ளதாகவும், இந்தியப் பாரம்பரிய இசைக்கு பன்முகத்தன்மை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.