மத்தியப் பிரதேசத்தில் 15 இடங்களுக்கான வேலைக்காக 11 ஆயிரம் பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.
குவாலியரில் பியூன்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாட்ச்மேன்களுக்கான பதினைந்து வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்காக 11 ஆயிரம் இளைஞர்கள் குவாலியரில் திரண்டனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ படித்தவர்களும் வந்திருந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளனர்.