இணை நோய்கள் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மருத்துவச் சான்றிதழ் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வரும் 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் 3வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் செலுத்திக்கொள்ள மருத்துவச் சான்றிதழ் அவசியம் என தகவல் வெளியான நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் சான்றிதழ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்படுபவர்கள் முன்களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.