ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், டெல்லியில் வரும் நாட்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் 165 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தடை செய்யப்பட்ட மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட செயல்பாடுகள் பற்றிய விவரங்களுடன் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றார்.
மேலும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், பெரும்பான்மையாக லேசான மற்றும் அறிகுறிகளற்ற பாதிப்புகளே இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.