மகாராஷ்ட்ராவில் ஆறு மாதங்களில் 23 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மராட்டிய சட்டப்பேரவையில் எழுத்து மூலம் அவர் தாக்கல் செய்த பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், வேட்டை, விஷம் வைத்தல், மின்சாரம் பாய்ச்சுதல் மூலமாக 23 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.