கல்வியாண்டின் நடுவில் பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசு, குறிப்பிட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
ஓய்வு பெறும் ஆசிரியர்களைக் கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் செய்யாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் ஆகியோர் அரசின் கொள்கை முடிவைச் சுட்டிக்காட்டித் தனி நீதிபதியின் உத்தரவை ரத்துச் செய்தனர்.