பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள் கிர்பான் எனப்படும் கத்தியை வைத்திருக்க உரிமம் பெற வேண்டும் என்று பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், கிர்பானை ஆயுதமாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அரசுத் துறைகளில் பணியாற்றும் சீக்கியர்கள் கிர்பான் வைத்திருப்பதற்கு புதுப்பிக்கத்தக்க உரிமம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்தியாவில் உள்ள சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.