இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோசிற்கும், அதற்கடுத்து செலுத்தப்படும் பூஸ்டர் டோசிற்கு இடையிலான இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் உள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசி, ஜனவரி 10ம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் 2ஆவது டோசிற்கும் பூஸ்டருக்கும் இடையிலான இடைவெளியை நிர்ணயிப்பது தொடர்பாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தொடர்ந்து விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டில் இதுவரை 61 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.