பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
முசாஃபர்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்ததுடன் பாய்லர் வெடித்து விபத்து நிகழ்ந்தது.
இதில், ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்த சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்திருக்கிறார்.