மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாஜகவின் முதல் தலைவரான வாஜ்பாய், 1998-ல் பிரதமராக இருந்தபோது நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை உலகின் கவனத்தை இந்தியா பக்கம் ஈர்த்தது. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட வாஜ்பாய், கடந்த 2018-ல் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது 97-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை..