ஒடிசாவை சேர்ந்த மணற்சிற்பி சுதர்சன் பட்நாயக் கிறிஸ்துமசை முன்னிட்டு மணலில் கிறிஸ்துமஸ் தாத்தாவான சாந்தா கிளாஸ் சிற்பத்தைத் தத்ரூபமாக வடித்துள்ளார்.
5,400 சிகப்பு ரோஜாக்களையும் இதர வெள்ளை மலர்களையும் கொண்டு இந்த மணல் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி ஒன்றில் கோவிட் கால விதிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்துமசை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டிருக்கும் இந்த பிரம்மாண்ட மணல் சிற்பத்தை செதுக்க 8 மணி நேரம் ஆனதாகக் கூறுகிறார், சுதர்சன் பட்நாயக்.