ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபாரதம் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலத்தில் அதிகப்படியாக சென்னையில் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை பகுதிகள், வணிக வீதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணிவது, தனிநபர் விலகலை கடைபிடிப்பது தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.