டெல்லி விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
இணைப்பு விமானம் மூலம் வரும் பயணிகள், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாத நிலையில் விமான நிலையத்தின் விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில வாரியான தனிமப்படுத்துதல் விதிகளைத் தெரிந்துக் கொண்டு உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்ளவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவிட் தடுப்பு தொடர்பான தடுப்பூசி சான்று , பரிசோதனை சான்று போன்ற அனைத்து விவரங்களையும் கையில் வைத்திருக்கும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் தெர்மல் பரிசோதனை போன்றவை நடைபெறும் என்றும் அறிகுறிகளுடன் காணப்படும் பயணிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படும் என்றும் கொரோனா ஒமைக்ரான் பாதிப்புடையோர் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது