கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்.
அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.