ஆந்திராவில் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்ற சபாநாயகர் சீதாராம், வீரர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய போது கீழே விழுந்தார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமுதாலவலசா (amadalavalasa) பகுதியில் உள்ள மைதானத்தில் சி.எம்.கோப்பை என்னும் பெயரில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
போட்டியை துவக்கி வைத்த சபாநாயகர் சீதாராம், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய நிலையில், எதிரே இருந்தவரை தொட முயற்சித்த போது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரை தூக்கினர்.