கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒயிலா சீனு என்பவர் மங்களூரில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒயிலா சீனு சக மீனவர் ஒருவரின் செல்போனை திருடியதாக குற்றஞ்சாட்டிய சக மீனவர்கள், திருடியதை ஒப்புக்கொள்ளுமாறு கூறி அவரது கால்களை கட்டி கிரேனில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, ஒயிலா சீனுவை தாக்கிய 6 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மங்களூரு போலீசார், 6 பேரையும் கைது செய்துள்ளனர்.