தேசியவாதிகளை மதிப்புக்குறைவாகவும் மோசமாகவும் நடத்துவது தொடர்வதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களை இழிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பாகக் கங்கணா ரணாவத் மீது மும்பைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாகக் கார் காவல்நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் பலத்த பாதுகாப்புடன் வந்து கங்கணா ரணாவத் கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை நேசிக்க வேண்டுமென்றால் மிகப் பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.