இந்தோனேஷியாவில் அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தங்கள் தாயாரின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அந்நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றுள் காண்போர் நெஞ்சை நெகிழச்செய்யும் வகையில், ஜகார்த்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்திற்குள் தங்கள் தாயாரின் பாதங்களை கழுவி சுத்தம் செய்தனர்.
அப்போது உணர்ச்சிப்பெருக்கில் தாய்மார்கள் கண்ணீர் மல்க தங்கள் குழந்தைகளை தடவிக் கொடுத்தனர்.