குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்த கோலாப்பூர் சகோதரிகளுக்கு மரண தண்டனை விதிப்பதை ஆதரிப்பதாக மகாராஷ்ட்ரா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1990-96 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் 13 சிறுவர்களை கடத்தி பிச்சையெடுக்க வைத்த இந்த சகோதரிகளும் அவர்களின் தாயும் பிச்சையெடுக்க மறுத்த குழந்தைகள் சிலரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டனர். தாயார் மறைந்துவிட சகோதரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களின் கருணை மனுக்கள் உச்சநீதிமன்றத்தாலும் குடியரசுத் தலைவராலும் 2006 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால் பல ஆண்டுகளாக சிறையில் தினமும் மரண பயத்தில் வாழ்வதாக புகார் அளித்து தண்டனையைக் குறைக்கக் கோரி சகோதரிகள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மறு முறையீடு செய்யப்பட்டுள்ளது.