ஒமைக்ரான் பரவலுக்கு சிகிச்சை அளிக்க 40 லட்சம் மொல்னுபிரவிர் மற்றும் பைசர் நிறுவனத்தின் மாத்திரைகளை ஆர்டர் செய்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு விகிதத்தை தடுப்பதில் மெர்க் ஷார்ப் மற்றும் டொஹெம்ஸ் நிறுவனங்களின் மொல்னுபிரவிர் மாத்திரை பயனளிப்பதாக அவசர கால அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மொல்னுபிரவர் மற்றும் பைசரின் Nirmatrelvir மாத்திரையை ஆர்டர் செய்திருப்பதாக அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைகளை முதல் நாடாக பிரிட்டன் அறிமுகப்படுத்தி உள்ளது.