அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குதல் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, மாநிலங்களவையில் எழுத்து மூலம் தாக்கல் செய்தார்.
குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் உரிமை சட்டத்தின்படி, 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் கட்டாய ஆரம்ப கல்வியை இலவசமாக வழங்குவதை கட்டாயமாக்குகிறது.
நாட்டில் உள்ள 97புள்ளி 49 சதவீத குழந்தைகளுக்கு ஆரம்ப பள்ளிகளிலும், 97 சதவீத குழந்தைகளுக்கு நடுநிலைப் பள்ளிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளிப்படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், புதிய பள்ளிகளை திறக்கவும், பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தவும், சீருடைகள், புத்தகங்களை இலவசமாக வழங்கவும் முழுமையான கல்வி திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.