நம்ம பசுமை சென்னை திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை வாழ் மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த இலக்கு அடையப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 508 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.