முற்றிலும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட துருகோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு துருக்கி சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் பொது மக்கள் துருகோவேக் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். முன்னதாக சீனாவின் சினோவேக் மற்றும் பைசர் டோஸ் தடுப்பூசிகளை துருக்கி பயன்படுத்தி வந்தது.
விரைவில் உலக சந்தைகளில் துருகோவேக் தடுப்பூசியை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.