பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஹரியானா மாநிலத்தில் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே, ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பின் , பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு வங்கி, உணவகம், வணிக வளாகம், அரசு அலுவலகங்கள், பேருந்துகளில் அனுமதி கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.