ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஜப்பானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 3ஆவது இடத்திற்கான போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற போட்டியில், இந்திய அணி 4க்கு 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், சுமித், வருண் குமார் உள்ளிட்டோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஏற்கனவே ரவுண்ட் - ராபின் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.