மற்ற வைரசை விட ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவுவதால், பெருந்தொற்றின் மோசமான பகுதிக்குள் நாம் நுழையலாம் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
விரைவில் அனைத்து நாடுகளுக்கும் ஒமைக்ரான் பரவும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது நெருங்கிய நண்பர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தனது விடுமுறை கால திட்டங்களை ரத்து செய்து விட்டதாகவும கூறியுள்ளார்.
ஒமைக்ரான் தொற்றால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று இன்னும் வரையரை செய்யப்படாததால், மக்கள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பில்கேட்ஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
சரியான நடவடிக்கைகளை எடுத்தால் 2022ம் ஆண்டில் பெருந்தொற்று நீங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.